Skip to main content

Northern Provincial Council

அண்மையில் பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட ஆலயத்தில் கௌரவ ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார்

பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (04.12.2024) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களும் பங்கேற்றனர். இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.