Skip to main content

Northern Provincial Council

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை (19.06.2025) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.

கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் கையளித்தனர்.