சுனாமி ஆழிப்பேரலையின் 20ஆவது ஆண்டு நினைவு தினமும் தேசிய பாதுகாப்பு தினமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை (26.12.2024) நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இ.அர்ச்சுனா ஆகியோரும் மாவட்டச் செயலர் எஸ்.முரளிதரன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
தேசியக்கொடி கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரனால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுனாமிப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.





