Skip to main content

Northern Provincial Council

கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் பிரிட்டனின் இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் பிரிட்டனின் இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (28.01.2025) யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தைப் பார்வையிட்ட பின்னர் அங்குள்ள கேட்போர்கூடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனும் இதன்போது உடனிருந்தார்.