Skip to main content

Northern Provincial Council

கௌரவ ஆளுநர் அவர்களை, புதிய பிரதம செயலாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை (20.05.2027) ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.