Skip to main content

Northern Provincial Council

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சேலம் ஆர்.ஆர். புரியாணி நிறுவனத்தின் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சேலம் ஆர்.ஆர். புரியாணி நிறுவனத்தின் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04.03.2025) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் வர்த்தக தொழில்துறை மேம்பாடு தொடர்பிலும், சுற்றுலாத்துறையை வடக்கில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும், வடக்கில் தமது தொழில்முயற்சியை முன்னெடுப்பதிலுள்ள நடைமுறைச்சவால்கள் தொடர்பாகவும் ஆளுநருக்கு, சேலம் ஆர்.ஆர். புரியாணி நிறுவனத்தின் தலைவர் எடுத்துக்கூறினார்.