Skip to main content

Northern Provincial Council

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (17.12.2024) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், சுகாதார அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் திருமதி அ.சாந்தசீலன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்திரண, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி,  சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவ அதிகாரி கோ.ரஜீவ் ஆகியோருடன், நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.