யாழ்ப்பாண மாவட்டத்தில், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் வழங்குவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழலிலும் சுற்றுலாத்துறையைத் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்த விசேட விநியோக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த விசேட எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்பான மேலதிக விவரங்களை அறிந்துகொள்வதற்கும், தமக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவரைத் தொடர்புகொள்ளுமாறு துறைசார்ந்த சேவை வழங்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்:


