Skip to main content

Northern Provincial Council

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார்.

டவர் மண்டப அரங்க மன்றத்தால் நடத்தப்படும் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தமிழ் மொழிமூலமான முதலாவது பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை (28.12.2024) இடம்பெற்றது.

கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.