Skip to main content

Northern Provincial Council

மறைந்த இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் அவர்களின் பூதவுடலுக்கு கௌரவ ஆளுநர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (28.05.2025) நேரில் அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்த சமயம் ஆளுநர் அஞ்சலி செலுத்தியதுடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.