Skip to main content

Northern Provincial Council

மாகாணங்களுக்கு இடையில் சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறைத் தொடரின் 4ஆவது அமர்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், நிர்வாகம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.