Skip to main content

Northern Provincial Council

முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு கௌரவ ஆளுநர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

ஆளுநர் அவர்களை, பாடசாலை அதிபர் வரவேற்றதுடன் பாடசாலையைச் சுற்றிக் காண்பித்தார். யோகபுரம் மகாவித்தியாலயத்தில் மிகப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள மரம் நடுகை மற்றும் தென்னங்கன்றுகள் நடுகை ஆகியனவற்றை ஆளுநர் பார்வையிட்டதுடன், இந்தச் செயற்பாட்டுக்காக பாடசாலைச் சமூகத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார்.