வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பலாலி விமானப் படைத்தளத்துக்கு நேற்று வியாழக்கிழமை மதியம் (09.01.2025) விஜயம் மேற்கொண்டார். அவரை பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.





