வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார்.
கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன:
>> மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04)
>> ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05)
>> வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களம் தரம் III (அறிவித்தல் இல: R/2026/06)
மேற்படி பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை மற்றும் விண்ணப்ப விவரங்கள் அடங்கிய முழுமையான விளம்பரத்தை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் “Exam and Recruitment –> Advertisement –> 2026” எனும் பகுதியில் பார்வையிட முடியும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2026.03.03 இற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
https://np.gov.lk/advertisement-2026/


