வடக்கு மாகாண பொதுச் சேவையின் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பில் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலர் ஆ.சிறி தெரிவித்துள்ளார்.
அறிவித்தல் இலக்கம் R/2026/09 இற்கு அமைவாக, திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
- மேற்றன் (Matron – ஆண் / பெண்) – தரம் III
- இல்லத்தாய் (House Mother) – தரம் III
- உதவி மேற்றன் (Assistant Matron – ஆண் / பெண்) – தரம் III
- உதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden – ஆண்) – தரம் III
- உதவி இல்ல ஆசிரியர் (Assistant House Master) – தரம் III
- உதவி இல்ல ஆசிரியை (Assistant House Mistress) – தரம் III
- தொழிற்பயிற்சிப் போதனாசிரியர் (Vocational Instructor – ஆண் / பெண்) – தரம் III
இது தொடர்பான முழுமையான விளம்பர அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் உள்ள ‘Exam and Recruitment Advertisement’ என்ற பகுதியினூடாகப் பார்வையிட முடியும்.
தகைமையுடையவர்கள் இணையத்தள விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றித் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் அனுப்பி வைக்க முடியும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 10.04.2026 ஆகும்.


