Skip to main content

Northern Provincial Council

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கௌரவ ஆளுநர் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய உயர் நிகழ்வுகளை ஒட்டியதாகக் கொண்டாடப்படும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தின் வாழும் அனைத்து பௌத்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெசாக் பண்டிகை, கருணை, சகிப்புத்தன்மை, அமைதி, மற்றும் இணக்கம் போன்ற பௌத்த தத்துவங்களை நினைவூட்டும் ஒன்றாகும். நாம் அனைவரும் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நோக்கி முன்னேற இந்தத் தத்துவங்கள் எங்களுக்கு உந்துதலளிக்கட்டும்.

இந்நல்ல நாளில், புத்தரின் அறிவொளி உங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும்.

வெசாக் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!