Skip to main content

Northern Provincial Council

பரிசாரகர் – தரம் III பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் பரிசாரகர் (ஆண் மற்றும் பெண்) – தரம் III பதவிக்கு காணப்படும் 25 வெற்றிடங்களுக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 18 – 45 வயதுக்கு உட்பட்ட, க.பொ.த. (சா/தர) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன், ஒரு அமர்வில் ஆகக்குறைந்தது ஐந்து பாடங்களில் சித்தி பெற்றவர்களும், அத்துடன் தொழிற் தகைமை மட்டம் 2 அல்லது 3 இற்கு (NVQ – 2 / NVQ – 3) குறையாதவாறு மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தேசிய தொழிற்தகைமை சான்றிதழை பதவியுடன் தொடர்புடைய துறையில் பெற்றவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.10.10 ஆகும்.

இது தொடர்பான முழுமையான அறிவித்தலை

www.np.gov.lk ➡️ Exams and Recruitments ➡️ Advertisement ➡️2025

எனும் வடக்கு மாகாண சபை இணையத்தள தொடர்பினூடாக பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://np.gov.lk/open-competitive-examination-for-recruitment-to-grade-iii-of-attendant-male-female-under-the-provincial-department-of-health-services-in-northern-province-2025/